திருவனந்தபுரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ. 152 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.
கேரள மாநிலத்தில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இம்மாநிலம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது.
இங்கு கடந்த 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் மட்டும் ரூ.152.06 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாக் அதாவது 24.50 சதவீதம் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது.
அதிலும் டிசம்பர் 25 அன்று அதாவது கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.