சென்னை
தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை உலகப்புகழ் பெற்றவை ஆகும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.
5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது.
7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
எனப் பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.