டெல்லி

மத்திய அமைச்சர் அமித்ஷா உரையை மத்திய அரசு எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கச் சொல்வது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அம்பேதகர் குறித்த கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்பெரும் போர்க்குரலை எழுப்பி வருகின்றன  காங்கிரஸ் எம் பிக்கள் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த பேச்சு அடங்கிய வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தள நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷரினேட்

”மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம். அதில் எதுவும் வெட்டி, ஒட்டி பதிவிடவில்லை. ஆனால் அந்த வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தள நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. ஆனால் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் அந்த நிறுவனம் அதை நீக்க மறுத்துவிட்டது. உங்கள் பேச்சில் தவறு இல்லை என்றால் இதுபோன்று ஏன் செய்ய வேண்டும்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாங்கள் (காங்கிரஸ் எம்.பி.க்கள்) நடத்திய போராட்டத்தின்போது எங்களது கைகளில் இருந்த அம்பேத்கரின் படத்தை மாற்றி அதற்கு பதில் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரசின் படத்தை ஒட்டி வலைத்தளங்களில் பாஜகஊடகப்பிரிவு வெளியிடுகிறது. இதுபோன்ற காரணங்களால் காங்கிரசை ஒரு போதும் மிரட்டமுடியாது. அம்பேத்கர் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.