கொடா

ராஜஸ்தான் முன்னாள் பாஜக எம்  எல் ஏவுக்கு வனத்துறை அதிகாரியை  அறைந்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கொடா மாவட்டம் லட்புரா தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. பவானிசிங் ராஜ்வத் தனது ஆதரவாளர்களுடன் லட்புரா வனத்துறை அதிகாரி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடார்.

அங்குள்ள கோவில் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டத்தை எதிர்த்து ஆதரவாளர்களுடன் பவானிசிங் ராஜ்வத் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வனத்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள் ஆதரவாளர்களுடன் நுழைந்த பவானிசிங் ராஜ்வத் பணியில் இருந்த வனத்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார்.

வனத்துறை அதிகாரி இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பவானிசிங் ராஜ்வத்தை கைது செய்து 10 நாட்கள் நீதிமன்ற காவலிலுக்கு பின்னர் ஜாமினில் விடுதலையானார். ஆயினும் அவர் மீதான வழக்கு த்டர்ந்து நடைபெற்று வந்தது.

நேற்று வனத்துறை அதிகாரியை அறைந்த வழக்கு தொடர்பான விசாரணை ராஜஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராஜ்வத் குற்றவாளி என அறிவித்த கோர்ட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.