அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 11:30 மணிக்கு துவங்கியது.

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உட்கட்சி தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் அதிமுக-வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதை மனதில் வைத்து ஒருசிலரை தவிர மற்றவர்கள் இந்த கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை.

பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்று என்றபோதும் இம்முறை யாருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.

2022, 2023 ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை முழுமையாக படம்பிடிக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்காக சுமார் 6000 பேருக்கு மட்டன், சிக்கன், மீன், முட்டை என அனைத்து விதமான அசைவ உணவுடன் விருந்து தயாராகி வருகிறது.