டெல்லி
நாடாளுமன்றத்தில் ஓவைசி இந்திய்யாவில் யாரும் சிறுபான்மயினருடன் அதிக்காரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லி எனக் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு மீதான விவாதத்தின் போது ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி,
”அரசியலமைப்பு நிர்ணய சபையின்போது, சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களால்தான் சிறையில் இருப்பது போன்று உணர்ந்தேன் என்று மவுலான ஆசாத் கூறியுள்ளார்.
இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது.
இதிய்யாவில் யாரும் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. வக்பு சொத்துகளைப் பறிப்பதே இங்கு ஒரே நோக்கம். உங்களுக்கு இருக்கும் பலத்தின் மூலம் வக்பு சொத்தை பறிக்க நினைக்கிறீர்கள்”
என்று கூறினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,
”இந்தியா சிறுபான்மையினருக்கு சட்டப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டும் இல்லாமல், தங்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்களுக்காக அடுத்தடுத்து வந்த அரசுகள் பணிகளைச் செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்துள்ளது”
என்று பதிலளித்துள்ளார்.