டெல்லி

ரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறி உள்ளதாக கூறி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் அங்கு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனருமான கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷாவுக்கு இது குறித்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கெஜ்ரிவால் அந்த கடித்த்த்தில்

”மத்தியில் உங்களுடைய ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் தலைநகரமான டெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது. சட்டம்-ஒழுங்குநிலை சீர்கெட்டு கிடக்கிறது.

 பலாத்காரம், போதை பொருள் கடத்தல், மாபியா மற்றும் குண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க முறையான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட முயற்சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும் இல்லை’

என்று தெரிவித்துள்ளார்.