டெல்லி
மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்நது சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்., 18ம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மேலும்’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிய நாளில் இருந்து, அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. நாடெங்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளநிலையில், இது நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும்,