சென்னை

தொடர் மழையால் சென்னை விமான நிலையக் கூறையில் இருண்டு அருவி போல் மழை நீர் கொட்டுகிறது.

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருவதால், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒன்றாவது முனையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் மேற்கூரையில் இருந்து மின்விளக்குகள் வழியே அருவி போல் மழைநீர் கொட்டுகிறது.

எனவே அந்த வழியாக சென்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமன நிலைய அதிகாரிகள் அந்த இடத்தில் மழைநீர் முதல் முறையாக கூரை வழியே கொட்டுவதாக தெரிவித்துள்ளனர். மழைநீர் மின்விளக்கு வழியாக கொட்டுவதால் அந்த வழியாக பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், விமான நிலையத்தில் ஒரு சில இடங்களில் மழைநீர் ஒழுகுவதாகவும், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.