டெடல்லி:  உயர்படிப்பில் சேருவதற்காக யுஜிசி நடத்தும் கியூட் தேர்வில் சில மாற்றங்களை செய்ய மத்தியஅரசு  முன்வந்துள்ளது. அதன்படி,  யுஜிசி கியூட் தேர்வுக்கான  திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட உள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம்.

பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான கியூட் நுழைவு அடுத்த ஆண்டில் இருந்து மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் மாற்றங்கள்

இந்தியா முழுவதும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர Common University Entrance Test (CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் சேர வேண்டும். வல்லுநர் குழுவின் அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்த யுஜிசி தலைவர்,  ’’கடந்த ஆண்டுகளில் இருந்து வரும் பரிந்துரைகளின் அடிப்படையில், கி யூட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த, திறமையான மற்றும் சாதகமான சூழலை வழங்குவதற்கு தேர்வு செயல்முறையை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன் அடிப்படையில், யுஜிசி CUET- UG மற்றும் CUET- PG தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தேர்வு முறையின் பல்வேறு கூறுகளை குறிப்பாக, அதன் கட்டமைப்பு, மொத்த தாள்களின் எண்ணிக்கை, பாடத்திட்ட அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள், பரிந்துரைகளை யுஜிசிக்கு அளித்தது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2025 இல் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) சேர்க்கைக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் யுஜிசி, திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட உள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம்’’ என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

 கணினி அடிப்படையிலான சோதனை (CBT) வடிவத்திற்குத் திரும்புதல், அனைத்து தாள்களுக்கும் ஒரே மாதிரியான 60 நிமிட கால அளவு, அனைத்து கேள்விகளுக்கும் கட்டாய முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு மொழித் தாள்களைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

CUET-UG, PG 2025 இல் மாற்றங்களுக்கு உட்பட்டது, திருத்தப்பட்ட விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தவர்,  CUET-UG மற்றும் CUET-PG 2025 ஐ நடத்துவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை விவரிக்கும் வரைவு திட்டத்தை ஆணையம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்தார்.