டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பல் வன்முறையில் மரணமடநிதோர் குடும்பத்தினரசி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு இதற்கு முன் ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த நீதிமன்ற, உத்தரவிட்டதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாரிகள் 2-வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தபோது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது.
4 பேர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு கடந்த 4-ந்தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் காரில் புறப்பட்டனர்.
காவல்துறையினர் அவர்களை காசிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் டெல்லி திரும்பி சம்பல் மாவட்டத்திற்கு தனியாக செல்லவும் தயாராக இருந்ததாகவும், காவல்துறையினர் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.
நேர்று சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சந்திப்பின்போது வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.