மோசடி வழக்கு தொடர்பாக 89 வயதான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உள்ளிட்ட மேலும் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் (தாபா) ஒன்றை திறப்பதற்காக தர்மேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள் பணம் வாங்கிக்கொண்டு ஏறமாற்றியதாக சுஷில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2018ம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் தர்மேந்திராவின் கூட்டாளிகளிடம் ₹17.70 லட்சம் காசோலை வழங்கப்பட்டதாக சுஷில் குமார் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபர் சுஷில் குமார் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் தர்மேந்திராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தர்மேந்திரா நீதிமன்றத்தில் பதிலளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.