பெங்களூரு

ன்று அதிகாலை கர்நடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மரணம் அடைந்துள்ளார்.

எஸ் எம் கிருஷ்ணா கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். பிறகு 2004 முதல் 2008 ம் ஆண்டு வரை மகாரஷ்டிர மாநில ஆளுநராவும் , 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை மந்திரியாவும் பதவி வகித்துள்ளார்.

எஸ் எம் கிருஷ்ணா கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971 முதல் 2014ம் ஆண்டு வரை பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  கடந்த ஆண்டு, அவரது ஆறு தசாப்த கால அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

தற்போது 92 வயதாகும் எஸ் எம் கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில்  பெங்களூருவில் எஸ் எம் கிருஷ்ணா இன்று மரணம் அடைந்தார்.  இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.