டெல்லி
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதானி குழுமம் மீது சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.
இது இந்தியாவில் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்துள்ளார் ஆயினும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன., அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதையொட்டி அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன., அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.
இன்று அவை தொடங்கியதும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 12 மணி வரை, 2 மணி வரை, 3 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும், 3 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் கூடியபோது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.