தனேட்டா ஹால்ட்
காசிக்கு செல்லும் ரயில் மீது ஒரு கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசிக்கு டெல்லியில் இருந்து காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்தின் தனேட்டா ஹால்ட் ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கினர்.
இந்த கல்வீச்சில் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரயில்வே காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.
பரேலி ரயில்வே காவல் நிலைய பொறுப்பாளர் அஜித் பிரதாப் சிங்
ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, ரயில்வே லைனை ஒட்டிய கிராமங்களில் ரயில்வே காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்,
என்று தெரிவித்துள்ளார்.