சென்னை’

டிகர் விஜய் பங்கேற்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.

வரும் 6-ம் தேதி சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜனா நிறுவனத்தின் நூல் வெளியீட்டு விழா நடக்க இருந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும்,விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்தஒ புத்தகத்தை விஜய்  வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆயினும், தற்போது இருக்கும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு விஜய் பங்கேற்கு நிகழ்ச்சியை பங்கேற்பதை திருமாளவன் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறார்

கட்சியின் மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். எனவே திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் தேவையற்ற யூகங்களுக்கு வழி ஏற்படுத்தும் என திமுக தரப்பு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதையொட்டி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முடிவை திருமாவளவன் கைவிட்டு இருக்கிறார். இந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் நூலை வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.