போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், ஒடும் ‘108’ ஆம்புலன்சில் நள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக, சிறுமியின் சகோதரி, அவரின் கணவர் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான புகாரில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று, 16 வயது சிறுமி, அவரது சகோதரி, சகோதரியின் கணவர் மூவரும் 108 ஆம்புலன்சில் பயணித்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்சில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதற்கு அந்த சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணையில், ஆம்புலன்சில் சென்ற 3 பேரும்நோயாளிகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும், இவர்களுடன் ஓட்டுனரின் கூட்டாளி ஒருவரும் ஆம்புலன்சில் இருந்ததாகவும், இந்த ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் நின்றுள்ளது. அப்போது சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என சொல்லி, ஆம்புலன்சில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது திடீரென சிறுமியுடன் அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
அதன்பின்னர், அந்த ஆம்புலன்ஸ் அருகே உள்ள இருட்டான பகுதிக்கு ஒட்டிச்செல்லப்பட்ட நிலையில், அங்கு ஓட்டுனரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுபாட்டிலே வைத்திருந்துவிட்டு, மறுநாள் காலையில் சாலையோரமாக அந்த சிறுமியை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனால் உடல் சோர்வான அந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை அவலத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், வெளியில் சொன்னால் மானம் போய்விடுமோ என்ற பயத்தில், சிறுமியின் தாய் அந்த விஷயத்தை மறைத்துள்ளார். ஆனால், அந்த சிறுமி அருகே உள்ள மற்றொருவரிடம் சொல்ல அவர்கள்மூலம் காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னரே சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 108 அவசர சேவையின் கீழ் இயக்கப்படும் அந்த குறிப்பிட்ட ஆம்புலன்சை கண்டுபிடித்ததுடன் அதன் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் வன்கொடுமைக்கு அவரது சகோதரியும், அவரது கணவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துஅவர்களையும் காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்களை உயிரை காக்க இயக்கப்படும் ஆம்புலன்சில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.