டெல்லி: ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிப்பு அபராதம் விதிக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272B இன் கீழ், எந்தவொரு இந்திய குடிமகனும் பல பான் எண்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. யாரேனும் நகல் பான் எண்ணைக் கண்டறிந்தால் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் பான்களை சரிபார்க்க தேவையான தொழில்நுட்பம் அரசிடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் 2.0 திட்டத்தின் கீழ் QR கோடுடன் கூடிய பான் கார்டு அனைத்து வரி செலுத்துவோருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுஉள்ளது. வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை இலவசமாகவே வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம், க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை பயன்பாட்டு வருவதோடு, பல்வேறு பயன்பாடுகள் எளிதாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருந்தாலும், ஒருவர் தனது பெயருடன் தவறான பான் அட்டையை இணைத்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இவை எல்லாம் தெரியாமல் நடந்த தவறாக எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கப்படும் பான் அட்டை, பயன்பாட்டுக்கு வந்ததும், மிக எளிதாக போலி பான் அட்டைகளும், பான் அட்டைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதாவது வருமான வரித்துறை சட்டம் 1961ன் 272 பி பிரிவின்படி, ஒரு இந்திய குடிமகன், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இன்றைய சூழலில் வேறு ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பான் கார்டு அப்ளை செய்து பெறுவது அதிகரித்துவிட்டது. அதோடு சில நிறுவனங்கள் போலியாக பான் கார்டு பெற்று அதை பயன்படுத்தும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடி நிறுவனங்கள் பல டூப்ளிகேட் பான் கார்டுகளை பயன்படுத்தி இதற்கு முன்னர் பிடிபட்டுள்ளனர். அசல் பான் கார்டு வைத்திருப்பவருக்கு இது குறித்த விபரங்கள் தெரியப்படுவதே இல்லை. எனவே உங்கள் பெயரில் ஏதேனும் டூப்ளிகேட் பான் கார்டு வழங்கப்பட்டிருக்கிறதா? என்று கண்டறிந்து அதை செயலிழக்கச் செய்வது அவசியம். ஒருவர் தங்களிடம் இரண்டு பான் கார்டு உள்ளதா என்பதை மதிப்பீட்டு அதிகாரியை அணுகி தெரிந்து கொள்ளலாம் அல்லது இ-ஃபைலிங் போர்டல் மூலம் தெரிந்து கொள்ளலலாம்.