டெல்லி: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார்.  கையில் அரசியல் சாசன புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்,.

இவரைத் தொடர்ந்து,  நான்டெட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவீந்திர வசந்தராவ் சவான் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

முன்னதாக இன்று காலை முதன்முறையாக மக்களவைக்கு வந்த பிரியங்கா காந்தி  தனது தாயும், ராஜ்யசபா எம்பியுமான சோனியா காந்தியுடன் நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறினார்.

நாடாளும் வந்தஅவரை . காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் உற்சாக வரவேற்று மக்களவைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் மக்களவை தொடங்கியதும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரியங்கா காந்தி உடன் அவரது  மகன் ரைஹான் வத்ரா மற்றும் மிராயா வத்ரா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.

முதன்முறையாக பாராளுமன்றம் நுழைகிறார்: இன்று எம்.பி.யாக பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி