அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறு குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படும் நிலையில் அதானியை இந்த அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதானி நிறுவனம் விளக்கமளித்துள்ளதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அதானி மறுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ? அதானி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வாரா ?” அப்படி ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும் என்று செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும், நாட்டில் சிறு சிறு குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படும் போது பலஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தொடர்புடைய வழக்கில் அதானியை கைது செய்ய வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு என்று உறுதிபட தெரிவித்தார்.