சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் நேற்று பெய்த மழையில், அதிகபட்சமாக வடசென்னையின் மணலி பகுதியில் 133,9 மிமீட்டர் மழை பெய்துள்ளது. க

ஃபெங்கல் புயல்  காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பேரிடர்  குழு உள்பட அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி சார்பில்,  மோட்டார்களுடன் தயார் நிலையில் ஊழியர்கள் உள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தது, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; மழை பாதிப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது; மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்; மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

இந்தநிலையில் சென்னை மாநில பேரிடர் மீட்பு துறை, சென்னையில் பல பகுதிகளில் பெய்த மழையின் அளவை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

வரிசை எண் மாவட்டம் மழைமானி நிலையம் பதிவான மழை அளவு (மி.மீ.)
1 சென்னை மாநகராட்சி மண்டலம் 02 D15 மணலி 133.9
2 சென்னை மாநகராட்சி மண்டலம் 01 கத்திவாக்கம் 111.9
3 சென்னை மாநகராட்சி மண்டலம் 03 புழல் 72
4 சென்னை மாநகராட்சி மண்டலம் 14 பெருங்குடி 70.2
5 சென்னை குடிநீர் வாரியம் மாதவரம் 69
6 சென்னை மாநகராட்சி மண்டலம் 02 மணலி 69
7 சென்னை மாநகராட்சி மண்டலம் 01 திருவொற்றியூர் 68.4
8 சென்னை மாநகராட்சி மண்டலம் 05 ராயபுரம் 66.9
9 சென்னை மாநகராட்சி மண்டலம் 13 அடையார் பூங்கா 66.9
10 சென்னை மாநகராட்சி மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 66.6
11 சென்னை மாநகராட்சி மண்டலம்  13 அடையார் 66
12 சென்னை மாநகராட்சி மண்டலம் 06 திரு. வி. க நகர் 64.2
13 சென்னை மாநகராட்சி மண்டலம் 12 மீனம்பாக்கம் 62.8
14 சென்னை மாநகராட்சி மண்டலம் 03 மாதவரம் 61.5