புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர்.

பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவபிரகாஷ், சூரியமூர்த்தி மற்றும் அவர்களது தந்தையை த.வெ.க.வினர் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சகோதரர்களான சிவபிரகாஷ், சூரியமூர்த்தி இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது த.வெ.க. கட்சியினர் வீடு புகுந்து தாக்கி வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கட்சி கொடி ஆகியவற்றை சேதப்படுத்திய சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில் அவர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.