மும்பை

டந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகல் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), என்.சி.பி (எஸ்.பி), காங்கிரஸ் ஆகிய மூன்ரு கட்சிகளும் சேர்த்தே 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும் கர்நாடகா மந்திரியுமான பரமேஸ்வர்  இது குறித்து,

”காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு, பல தொகுதிகளில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் அணியின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.

அதேபோல,உத்தவ் அணிக்கு காங்கிரஸ் தரப்பில் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.

தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியை சேர்ந்தவர்களும் அதே வகையில் செயல்பட்டனர். இப்படி முழு ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், கூட்டணிக்குள் சில குறைகள் இருந்தன”

என்று கூறியுள்ளார்.