சென்னை
தமிழக இந்து அறநிலையத்துறை ஆலயங்கலின் தல வரலாறு மாற்றி எழுதப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை தமிழகத்தில் உள்ள 26 பெரிய கோவில்களின் வரலாற்றை காலத்துக்கு ஏற்ப மாற்றி எழுதப்போகிறோம் என்று அறிவித்து, குழு அமைத்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா இந்த வீடியோவை தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில், கோவில் தல வரலாற்றை மாற்ற எழுத நடக்கும் சதி என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை,
‘அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் தல வரலாறு மற்றும் தல புராணங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் தற்கால எளிய தமிழ் நடையில் எழுதி புத்தகமாக வெளியிடுவதற்காகவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று குழு ஒன்று அமைக்கப்பட்டது. புராண கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தற்கால தமிழில் தல வரலாறு எழுதப்படுகிறது’
என்று விளக்கம் அளித்துள்ளது.