கொச்சி
மாலே சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சிக்கு திருப்பி விடப்ப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் பெங்களூரில் இருந்து மாலத்தீவின் தலைநகராக மாலே நோக்கி இண்டிகோ ஏ321 விமானம் ஒன்இ சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பிற்பகல் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பிர்பகல் 2.20 மணி அலவில் இண்டிகோ விமானம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டதாகவும், அதை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும், அந்த விமானம் பத்திரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
C