உடுப்பி
மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கப்பினாலே வனப்பகுதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மாவோயிஸ்டு குழு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவரான விக்ரம் கவுடா இந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி இன்று உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் கவுடாவின் குழுவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை கண்டறியவும், மாநிலத்தில் மாவோயிஸ்டு நடவடிக்கைகளை மேலும் ஒடுக்கவும் விசாரணைகள் நடந்து வருவதாக \தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2005ம் ஆண்டு சிக்கமகளூரில் ஒரு முக்கிய மாவோயிஸ்டு சித்தாந்தவாதியான சாகேத் ராஜன் கொல்லப்பட்டதற்கு பிறகு, இப்பகுதியில் நடந்த முதல் ஆயுத என்கவுண்டர் இதுவாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாவோயிஸ்டு செல்வாக்கை விக்ரம் கவுடாவின் மரணம் பலவீனப்படுத்தக்கூடும் என்று நம்புவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.