ஸ்மோட்டோ நிறுவனம் டிஸ்ட்ரிக்ட் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உணவகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை உள்ளடக்கிய உணவு மற்றும் பொழுதுபோக்கு சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
iOS மற்றும் Android சாதனங்கள் இரண்டிலும் அணுகக்கூடிய இந்த செயலி, பொழுதுபோக்குத் துறையில் Zomatoவின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் Paytm இன் பொழுதுபோக்கு மற்றும் டிக்கெட் வணிகத்தை ₹2,048 கோடிக்கு ($244 மில்லியன்) Zomato கையகப்படுத்திய நிலையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை திட்டமிட ஒரு முழுமையான டைன்-அவுட் அனுபவத்தை பெறும் வகையில் ஆல் இன் ஒன் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘District’ செயலி மூலம்
உணவக முன்பதிவுகள், திரைப்பட டிக்கெட்டுகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஷாப்பிங் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை பெறமுடியும்.
Zomato வின் இந்த முயற்சி மூலம் புக்மைஷோ போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.