நாக்பூர்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி மூத்த தலைவரும் மராட்டிய மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டதில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
அவர் இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்தபோது, அனில் தேஷ்முக்கின் காரின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அனில் தேஷ்முக்கின் தலைப்பகுதியில் கற்கள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் உடனடியாக அவர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.