நடிகை கஸ்தூரியை தமிழக காவல்துறையினர் ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரை விசாரணைக்கு ஆஜராக வருமாறு போலீசார் சம்மன் வழங்க சென்ற நிலையில் அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டை பூட்டிவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.

இதையடுத்து கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரை தேடிவந்த எழும்பூர் காவல்நிலைய தனிப்படை போலீசார் நடிகை கஸ்தூரியை இன்று ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.