ஓட்டவா: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்த கடனாவில், தற்போது, காலிஸ்தான் பயங்கரவாதிகள், இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு துணை போன கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புதிய கோஷம் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதி களின் இந்த திடீர் மிரட்டல் கனடா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது, அந்நாட்டுக்கே பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தன்வினை தன்னைச் சுடும் என்ற பழிமொழிக்கு ஏற்ப காலிஸ்தான் பயங்கரவாதி களுக்காக இந்தியாவுடன் முறைத்துக்கொண்ட, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோடிவின் தலைமையில் கை வைத்துள்ளனர் பயங்கரவாதிகள்…
கனடா எங்கள் நாடு, உடனே எல்லோரும் வெளியேறுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால், கனடா மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கனடா அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வந்தது. இதனால், இந்தியாவுக்கு எதிராகவே களமிறங்கியது. தற்போது தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டதை போல, செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தி, இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இப்போது, “கனடா எங்கள் நாடு” என்று அவர்கள் அறிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில், “இது எங்களுடைய நாடு; இங்குள்ள வெள்ளையர்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள்” என கோஷமிட்டனர். இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய விபரீதம் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோவை, கனடாவின் நேஷனல் டெலிகிராப் ஊடகத்தின் மூத்த செய்தியாளர் டேனியல் போர்டுமேன் வெளியிட்டு உள்ளார். அதோடு அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “சர்ரே நகரில் காலிஸ்தானியர்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள், கனடா தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். வெள்ளையின மக்கள் ஐரோப்பா அல்லது இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காலிஸ்தானியர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு பேச நாம் அனுமதிக்கலாமா? நமது வெளியுறவு கொள்கையை வரையறுக்க இவர்கள் யார்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, கனடாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரி போராடிய காலிஸ்தான் தீவிரவாதிகளில் பலர் கனடாவில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், கனடாவின் டொரன்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயில் மீதும், பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இலங்கையை பூர்விகமாக கொண்ட இந்துக்கள், நேபாளத்தை சேர்ந்த இந்துக்கள், வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் கனடாவில் பல்வேறு கோயில்களை கட்டி உள்ளனர். இந்த கோயில்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது கிடையாது. ஆனால் இந்திய வம்சாவளியினர் கட்டிய இந்து கோயில்கள் மீது மட்டும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
அதே வேளையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார். காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளை அவர் வெளியேற்றி உள்ளார். கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஜஸ்டின் செயல்பட்டு வருகிறார். இதன்காரணமாக அவர்கள், கனடாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் கனடா அரசுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கோஷத்தை காலிஸ்தான் தீவிரவாதிகள் எழுப்பி உள்ளனர்.
“கனடாவில் வசிக்கும் வெள்ளையின மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் ஐரோப்பிய நாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.