ஸ்ரீநகர்

ன்று ஜம்மு காஷ்மீரில் 5.2ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.43 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதுரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானதால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகவே காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.