மும்பை
ஏர் இந்தியாவுடன் விஸ்தார இணைந்த பின் தோஹாவில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் வந்துள்ளது.
டாடா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியபின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. இணைப்புக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கி உள்ளன.நேற்றிரவு விஸ்தாரா பெயரிலான கடைசி விமானம் ஒடிசா மாநிலம் மாநிலம் புவனேஸ்வரில் இருந்து டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது..
ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா விமான நிறுவனம் இணைந்த பின் முதல் விமானம் (AI2286) தோஹாவில் இருந்து நேற்று இரவில் புறப்பட்டு இன்று அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இது இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை ஆகும். மேல்லும் நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டு வந்தது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.
ஏற்கனவே விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்திற்கான குறியீடு UK என்று இருந்தது. அது இப்போது AI என மாற்றப்பட்டு, விமானத்தின் எண்களும் 3 இலக்கத்தில் இருந்து 4 இலக்கமாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, UK 955 என்ற விஸ்தாரா விமானம், இனி AI 2955 என்ற குறியீட்டில் இயக்கப்படும்.
ஏர் இந்திய நிறுவனம் விமானங்கள் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் விமான எண்கள் மாற்றம் குறித்து, முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.