சென்னை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாயுடன் நேரடி விவாதம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துளார்.
இன்று மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயில்வோருக்கு சாம்பியன்ஸ் கிட் உதவி பொருட்கள் தொகுப்பையும் அவர் வழங்கினார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை விமர்சித்திருந்தார். அத்துடன், யார் ஆட்சியில் அதிக மக்கள் நலத்திட்டங்கள் என விவாதிக்க தயாரா? என முதல்-அமைச்சரை நோக்கி கேள்வியெழுப்பினார்
இந்த விழாவில்உதயநிதி ஸ்டாலின;
“தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம். விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் தமிழக அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது ”
என உரையாற்றியுள்ளார்.