சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சமீப காலமாக சோலார் பேனல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதனப்டி,   ஆர்.ஏ.புரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை. தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனமான ஓபிஜி பவர் அண்ட் இன்ப்ரா மின் உற்பத்தி நிறுவன இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தக்கு சொந்த  ஆர்.ஏ.புரம், கீழ்பாக்கம், ஆழ்வார்பேட்டையில் உள்ள  நிறுவன இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்நிறுவன ஆலை அமைந்துள்ள  ஆந்திர எல்லையான தடா மற்றும் செங்கல்பட்டில் உள்ள இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.