டெல்லி

ன்று சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கிறார்.

நேற்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். மத்திய அரசு அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி நியமித்தது.

இன்று, நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார்

சஞ்சீவ் கன்னா கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்து 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.

பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். மேலும் சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்ளில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.