சென்னை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இதுகுறித்து  மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

சமீப காலமாக,  மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. இதனால் மருத்துவத்திற்கான செலவினங்களையும் மருத்துவர்களும், மருத்துவமனைநிர்வாகங்களும் அதிகரித்துள்ளது. மருத்துவம் என்பது சேவை என்பதை விட்டு இன்று பெரும் தொழிலாக மாறி உள்ளது. விளம்பரங்களுக்கு மயங்குவது என்பது மனிதா்களின் இயல்பாக மாறிவிட்டது. அத்தியாவசிய பயன்பாட்டுக்கு விளம்பரத்தை கண்டு மயங்கலாம். ஆனால் வாழ்வைக் காப்பாற்றும் மருத்துவ சிகிச்சைக்கு விளம்பரத்தை நம்புவது ஆபத்து. மருத்துவம் என்பது அனைத்தையும் கடந்தது. உயிரோடும் உடலோடும் நடத்தும் ஒரு போராட்டமே சிசிச்சை. அந்த சிகிச்சையின் மதிப்பு விலை மதிப்பற்றது. அது ஒரு தனித்துவமான சேவை. உயா்ந்த சேவையை செய்த மருத்துவா் தனக்கான விளம்பரங்கள் தேடுவது தவறு.

இதன் காரணkhf, மருத்துவர்கள், மருத்துவமனை தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு தொக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  மனுதாரரின் கோரிக்கை ஏற்க மறுத்ததுடன்,  மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் சரிபார்த்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம்  வெளியிட தடை விதிக்கமறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்,  போலி மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும், மனுதாரர் மெடிக்கல் கவுன்சிலை நாடி தீர்வு பெறலாம் என அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவ சிகிக்சை பெற்ற நோயாளிகள் குறித்தோ தனிப்பட்ட மருத்துவரை முன்னிலைப்படுத்தியோ நோயாளிகள் பெற்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை குறித்தோ சமூக ஊடகங்களில் வீடியோ காட்சிகளாக வெளிப்படுத்தி மருத்துவமனைகள் விளம்பரம் தேடக்கூடாது என அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய மருத்துவ குழு 2022 அறிக்கையின்படி இந்திய அளவில் சுமாா் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற மருத்துவா்கள் உள்ளனா். தமிழ்நாட்டில் 1,30,000 மருத்துவா்கள் உள்ளனா். இதில் 3% மருத்துவா்கள் தங்களைப்பற்றி விளம்பரம் செய்து கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இணையதளங்களில் மருத்துவா்கள் விளம்பரம் செய்து கொள்ளும் போக்கு அதிகமாக உள்ளது.

இந்த வகை விளம்பரங்களை நம்பும் மக்கள் எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவா்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போக்கும் அதிகமாக உள்ளது.

சில போலி மருத்துவா்களும் இது போன்ற சமூக ஊடகங்களில் தங்களை குறித்து மிகுந்த விளம்பரம் செய்து கொள்கின்றனா். அவா்களது பெயருக்கு பின்னால் இருக்கும் மருத்துவ பட்டங்களின் உண்மைத்தன்மையை அறிய முடியாத நிலையே உள்ளது.

இது போன்ற மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்களுக்கு தேசிய மருத்துவ குழு முற்றிலும் தடை விதிப்பது அவசியம்.

1954 மருந்துகள் மற்றும் தீா்வுகள் சட்டம் மருத்துவா்கள் தங்களைப பற்றி விளம்பரம் செய்து கொள்வதை முற்றிலும் தடை செய்கிறது. மருத்துவமனைகள் தேசிய மருத்துவ குழு விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு விளம்பரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கிறது.

சமூக ஊடங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன. நாளிதழ்கள், தொலைகாட்சி, வானொலி, இளையதளங்கள் என்று எங்கும் விளம்பரங்களின் தாக்கம் உள்ளது. இந்த செலவுகள் அனைத்தும் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் நுகா்வோரான நம் மீதே திணிக்கப்படுகிறது.

நோயின் தன்மை அறிந்து அதற்கேற்ப மருந்துகள் வழங்கி குணப்படுத்துவதே மருத்துவரின் கடமையாகும். இதை முறையாக செயல்படுத்திவிட்டால் நோயாளி முழுமையாக குணமடைந்துவிடுவாா். இதற்காக குணமடைந்த நோயாளிகளை வைத்து காட்சி ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் தேடுவது சரியல்ல.

அதன் பொருட்டு லட்சங்களையும் கோடிகளையும் ஏன் விளம்பரத்திற்கு செலவழிக்க வேண்டும்? மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வ தற்காக இருக்ககூடாது. அது பொதுமக்களின் நலன் சாா்ந்து இருக்க வேண்டும்; மருத்துவ விழிப்புணா்வை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மருத்துவர்களும், மருத்துவமனைகளும் வியாபார நோக்கிலேயே தங்களது மருத்துவமனை குறித்து விளம்பரங்களை வெளியிட்டு ஆதாயம் தேடி வருகின்றனர்.  மருத்துவா்கள் செய்யும் விளம்பரங்களை கண்டு மயங்கி செல்லும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளது. விளம்பரங்களுக்கேற்ப மருத்துவ செலவும் அதிகமாக இருக்கும். அவா்கள் செலவினை எவ்விதம் ஈடு செய்வாா்கள்? எத்தனை நோயாளிகளால் இதை சமாளிக்க முடியும்?  என்பது கேள்விக்குறியாக உள்ளது. வசதி இல்லாதவா்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்துவிட்டு சிகிச்சைக்கு சென்றால்  அவர்களின் நிலைமை நோயின் தாக்கத்தை விட சோகமாகிவிடும்.

அதனால்தான் மருத்துவம் மற்றும் மருத்துவமனை விளம்பரங்களுக்கு தடை கோரப்பட்டுக்கு, அலோபதி மருத்துவம் வருவதற்கு முன்பு, இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவர் மூலமே எல்லா நோய்களும் குணமாக்கப்பட்டது.  சித்தா்கள் மருத்துவத்தைப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்தனா். மருத்துவம் தவறானவா்கள் கையில் சென்றுவிடக்கூடாது என்ற உயரந்த நோக்கில்தான் அவ்வாறு செய்தாா்கள்.   அன்றைய கால மருத்துவர்கள்  சுய விளம்பரத்தைத் தேடாத உயா்ந்த நிலையில் இருந்துள்ளாா்கள். நோயாளியின் நோயை குணப்படுத்த மட்டுமே தாங்கள் கண்டுபிடித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி வந்துள்ளனா்.

ஆனால் இன்றைய விளம்பர உலகத்தில் மருத்துவ விளம்பரமும் தவிா்க்க முடியாத நிலையாக உருவாகியுள்ளது.  விளம்பரம் செய்து கொள்ளும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.