சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம அடுத்த் 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்ற அறிவித்து இருந்தது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இது 11, 12-ம் தேதிகளில் மேற்கு திசையில் தமிழகம் – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவான காற்று சுழற்சியாகவோ அல்லது தாழ்வுப் பகுதியாகவோ மாறி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.