சென்னை:  2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் செல்வராசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விருதுக்காக முனைவர் செல்வராசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,   சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வர்  ஸ்டாலின்  வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழ், கருணாநிதி வெண்கல சிலை வழங்கப்பட்டது.