சென்னை; ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வகையில் செயல்படும் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசுக்க  தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்கப்படுவதால், ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை  சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில்,  ஆன்லைன் மூலம் போதை மாத்திரி விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க, ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவ்வப்போது போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை குறித்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சமீப காலமாக, நேரடியாக இல்லாமல், இளைஞர்களிடம் ஆன்லைன் மூலமாக போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஏற்கனவே உணவு பொருட்கள் மற்றும் கொரியர்கள் மூலம் போதை பொருள் டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், தற்போது ஆன்லைன் மொபைல் செயலிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  போதை பொருள் விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மத்திய சுகாராதத்துறை செயலாளருக்கு, தமிழக சுகாரதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார். அந்த  கடிதத்தில், “ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும். ஆன்லைன் செயலிகள் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Reddit ஆப் மூலம் போதைபொருள் விற்பனை! சென்னையில் 5 பொறியியல் மாணவர்கள் கைது…