சென்னை
நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரலி என தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. குறிப்பாக விமான்ங்கள், அரசு அலுவலகங்கல், மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு இது போல மிரட்டல்கல் விடுக்கப்படுகின்றனா
அவ்வரிசையில் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அது கடும் பரப்பரப்பை உண்டாக்கியது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வந்துள்ளது.
உடனடியாக மோப்ப நாய் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.