கோவை

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி பட திரிவித்துள்ளார்.

கோவைக்கு 2 நாள் பயணம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்த பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து,கோவை தெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற் கொல்லர்களின் பட்டறையில் கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்.

“மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன்”

எனத் தெரிவித்துள்ளார்.