புனே
புனே மாவட்டத்தில் மகாராஷ்டிர தேர்தல் பறக்கும் படையினர் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்288 உறுப்பினர்களை கொண்ட 15-வது சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
புனே மாவடட ஆட்சியர் சுஹாஸ் திவாசே செய்தியாளர்களிடம்
”தேர்தலையொட்டி நடந்த சோதனையில் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் ரூ.3.05 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.1.04 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.9.01 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை அடங்கும்.
அதிக அளவாக கதக்வாஸ்லா, ஷிரூர் மற்றும் போசாரி சட்டசபை தொகுதிகளில் அதிக மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பான 22 புகார்களில் 2 புகார்கள் தவிர மற்றவை தீர்க்கப்பட்டு விட்டன”
என்று கூறியுள்ளார்