கோவை
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வருகிறார்.
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இன்று கோவையில் இருந்து இந்த கள ஆய்வுப்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடங்குகிறார்.
இதையொட்டி கோவைக்கு வரும் அவர் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு, தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
இன்று காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வு பணியின் ஒரு அங்கமாக, முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார்.
மாலை 4 மணிக்கு போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற்கும் முதல்வர், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள.