டெல்லி
டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததையொட்டிஉச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு வினா எழுப்பி உள்ளது.
தொடர்ந்து டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. அதாவதுடெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆஅனால் தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகை அன்று டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருந்தது.
இது தொடர்பான வழக்கில், டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பியதுடன் காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ளது. பட்டாசு தடையை ஏன் திறம்பட அமல்படுத்தவில்லை என்பதை ஒரு வாரத்தில் தெளிவுபடுத்துமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
டெல்லி அரசு பட்டாசுகளுக்கு தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைக் கவனித்த உச்சநீதிமன்றம், தானாக முன்வந்த கண்டனம் தெரிவித்துள்ளது.