ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.

மொத்தம் 90 சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது. இதைத்தொடர்ந்து  இன்று மாநிலத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

முன்னதாக,   ஜே & கே சட்டசபையின் சபாநாயகராக மூத்த NC எம்.எல்.ஏ அப்துல் ரஹீம் ராதர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தேசிய மாநாட்டு கட்சி யின் மூத்த தலைவரான இவர்,  7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது,   அப்துல் ரகீம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்ட சபையின் முதல் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப் பட்டார். அவருக்கு , தற்காலிக சபாநாயகர் முபாரக் குல் சபையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து  அவரை முதல்-மந்திரி உமர் அப்துல்லா, எதிர் கட்சி தலைவர் சுனில் சர்மா ஆகியோர் சபா நாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதைத்தொடர்ந்து  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் சட்டப்பேரவை அமர்வு ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. அவை கூடியதும்,  மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) எம்.எல்.ஏ. வகீத் பாரா,  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வந்தார். (இவர் புல்வாமா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்)  இவர் கூறும்போது, `ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்த அவை எதிர்க்கிறது என்று கூறி தீர்மானத்தை முன் வைத்தார்.

இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 28 எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிராக எழுந்து நின்றனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்த முதல்வர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்தார்.

இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 28 எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிராக எழுந்து நின்றனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.  சட்டசபை விதிகளை மீறி தீர்மானம் கொண்டு வந்ததற்காக வகீத் பாராவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஷாம்லால் சர்மா கோரிக்கை வைத்தார்.

அமளிக்கு பிறகு உமர் அப்துல்லா பேசினார்.  இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர்  ரஹீம் ராதர், இந்த  தீர்மானத்தையும் ஏற்கவில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து கவர்னர் மனோஜ் சின்கா உரை ஆற்றினார்.

முன்னதாக,  ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர்அப்துல்லா பதவி ஏற்றதும்,   அவரது தலைமையில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி இருந்தார். இது தொடர்பாக உமா் அப்துல்லா டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.