கனிகிரி
கோவிலில் அண்டா திருடியவருக்கு நீதிபதி நூதன தனடனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்த அங்கய்யா (வயது 28 கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோயிலுக்குள் நுழைந்ஹ்டார். பிறகு அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அங்கையாவிட, இருந்து கோயில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கனிகிரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தியபோது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அவர் நவம்பர் 2-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.