திருவனந்தபுரம்

கேரள அரசு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ 5 லட்சத்துக்கான இலவச காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.நடப்பாண்டுடு மண்டல பூஜை டிசம்பர் 26 மற்றும் மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14 அன்றும் நடைபெற உள்ளது.

eனவேஇதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது..

Sabarimalai, devotees, Rs,. 5 lacs insurance, Kerala Govt,