திருவாரூர்
வரும் 13 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு கந்தூரி விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழா 14 நாள்கள் நடைபெறும். த விழாவில் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.
எனவே கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.