பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவினர். அவர்களை பதவி நீக்க செய்ய காங்கிரஸ் கட்சி கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நிலையில், சுமார் 2 ஆண்டுகள் கழித்து, அதை ஏற்க மாநில சபாநாயகர் மறுப்பதாக அறிவித்து உள்ளார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு  பாஜகவுக்கு தாவிய 8  காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய காங்கிரஸ் மனுவை கோவா சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் தவாட்கர் தற்போத  நிராகரித்துள்ளார். 2022ல் ஆளும் பாஜகவுக்குத் தாவிய 8 எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் தாக்கல் செய்த தகுதி நீக்க மனுவை கோவா சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் தவாட்கர்  2024 நவம்பர் 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தார்.

கோவா காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து,  மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து  எட்டு எம்எல்ஏக்கள் விலகுவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள்  பாஜகவில் இணைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கட்சி மாறிய 8 எம்எல்ஏக்களையும் குதி நீக்கம் செய்ய வேண்டும்,  காங்கிரஸ் கட்சி சார்பில்  சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியது தொடர்பாக, கோவா முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் கோவா சபாநாயகரிடம் அளித்த மனுவில், “திகம்பர் காமத், அலிக்சோ செக்வேரா, சங்கல்ப் அமோன்கர், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, கேதர் நாயக், ருடால்ப் பெர்னாண்டஸ் மற்றும் ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய  8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவி இருப்பதால், கட்சி தாவல் சட்டப்படி, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

அரசியல் சட்டப்பிரிவு 191ன்படி பத்தாவது அட்டவணையின் பத்தி 2ன் படி, 8 ஆவது சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதியை பெற்று வெற்றி பெற்ற அவர்கள் கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேர்ந்திருப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,”என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  கிரிஷ் சோடாங்கரின் மனுவை நிராகரிப்பதாக  சபாநாயகர் ரமேஷ் தவாட்கர் அறிவித்து உள்ளார்.,”ஒரு அரசியல் கட்சியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஒருவர், இன்னொரு கட்சியில் சேரும்போது அவர் தகுதி இழப்பு செய்யப்படமாட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.