சென்னை: “திராவிடமும்  தமிழ் தேசியமும் ஒன்றா.?, 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்பாயா என தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக வறுத்தெடுத்தார்.

தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்று நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையாக அறிவித்து கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அது கொள்கை அல்ல., அழுகிய முட்டை.!”  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் , தேசியமும் திராவிடமும் தவெக கொள்கை என்றும், தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை தனது கட்சி கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தினார். இதற்கு நாம் தமிழர் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”  நான் குட்டிக்கதை சொல்ல வரவில்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க  வந்திருக்கிறேன்,  தேசியமும், திராவிடமும் ஒன்றா.?  தமிழ் தேசியம் என்பது வேறு, திராவிடம் என்பத வேறு, அது கொள்கையல்ல., கூமுட்டை, ஒண்ணு சாம்பாருன்னு சொல்லு அல்லது கருவாட்டுக்கொழம்பு  என்று சொல்லு,  அதுஎன்ன கருவாட்டு சாம்பார்…  நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அதை படித்து அறிந்து, அதற்கு பிஎஸ்டி பெற்றுள்ளோம் என்றவர்,  நீங்க இனிமேதான் சங்க இலக்கியம் எங்கே இருக்கிறது என தேடனும்  என்றவர், ஆனால் சங்க இலக்கியங்களில் வருகின்ற பாண்டியன், நெடுஞ்செழியனின் பேரனும், பேத்தியும் நாங்கள்.

இது கொள்கை அல்ல கூமுட்டை.,  வாட் ப்ரோ.? its very  wrong bro.,

ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு.,

நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து போயிருவ.

இது சினிமாவில் பேசும் பன்ச் டயலாக் இல்ல தம்பி., நெஞ்சு டயலாக்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?  தமிழ்த்தேசியத்தை கொன்று குவித்தபோது அதனை வேடிக்கை பார்த்து திராவிடம்.

இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட காட்டாத., 2026-ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. எனது லட்சியத்துக்கு  எதிராக யார் வந்தாலும் எதிரி எதிரிதான்…

இதயத்திலே நெறுப்பு எரிகிற போது சில பொறிகள் வாய் வழியே வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமக்கின்ற வலியின் மொழி தான் எங்கள் மொழி. விடுதலை உரிமைக்கு பேசுவதற்கும், அடிமை உரிமைக்கு பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. எங்கள் லட்சியத்திற்கு எதிராக எங்களை பெற்றோரே வந்தாலும் எதிரி, எதிரி தான். அதில் அண்ணனும் கிடையாது, தம்பியும் கிடையாது.

வேலுநாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ப்ரோ இது டிரைலர் தான் ப்ரோ, மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால் வரும்?

நீ வைத்திருக்கும் வேலுநாச்சியார் கட்அவுட் நான் வரைந்தது தம்பி. வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி தம்பி., நான் வரலன்னா வேலுநாச்சியார் யார் என்று தெரிந்திருக்காது.  அழகுமுத்துக்கோன் யாரென்று தெரிந்திருக்காது., அஞ்சலையம்மாளை யாருக்கும் தெரியாது., சேர சோழ பாண்டியர் யாருன்னு தெரிந்திருக்காது.

பெரியாரிடம் பெண்ணுரிமை பெற்றீர்கள் என்கிறீர்கள்., அப்படியென்றால் வேலு நாச்சியாரிடம் எதனை பெற்றீர்கள்.?

1947-ல் பெரியார், ‘ தமிழ் மாகாணம் கேட்பது கேடு விளைவிக்கும்.’ என கூறி, ‘தமிழ் மாகாணம் கேட்டு போராடும் போராட்டத்தில் தமிழர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் .’ கூறினார்  அவர் தான் உங்கள் வழிகாட்டி. 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்று பேசிக் கொண்டிருக்கிறாய்.” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.